ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் பணிப்புரியும் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனது சொந்த நிதியை செலுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ரணில் விக்ரமசிங்க தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 3 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி தலைமையகத்தில் 36 பேர் கடமையாற்றி வருவதாக அறிய முடிகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியை அடுத்து, கட்சி கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஊழியர்களுக்கு கூட, சம்பளத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. (TrueCeylon)