சீனாவிலுள்ள ஐஸ் க்ரீம் நிறுவனங்களின் மூன்று மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அதில் கொவிட் வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் தியான்ஜின் மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்றாளர் ஒருவரிடமிருந்து இந்த வைரஸ் ஐஸ் க்ரீமிற்குள் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
குளிரான நிலைமையினால், இந்த வைரஸ் ஐஸ் க்ரீமிற்குள் உயிர் வாழ்ந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்தில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த நிறுவனத்தில் கடமையாற்றிய 1600 ஊழியர்களுக்கு கொவிட் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் 700 பேருக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை எனவும், 900 பேரின் பரிசோதனை பெறுபேறுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனத்தில் பொதியிடப்பட்ட 4800 ஐஸ் க்ரீம் பொதிகள் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2700 பொதிகள் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஸ் க்ரீம்மின் ஊடாக மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (DAILY NEWS)
Discussion about this post