பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மாநாடு நாளைய தினம் பிரசல்ஸ்சில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வண்டர் லயனுடன் பொறிஸ் ஜோன்சன் கலந்துரையாடவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை பின்பற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
விதிகள் தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தாலும் அது குறித்து தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவில்லை.
இந்த நிலையிலேயே, மீன்பிடி உரிமைகள், வர்த்தக போட்டித் தன்மைக்கான விதிகள் தொடர்பில் பொறிஸ் ஜோன்சன் மற்றும் ஊர்சுலா வண்டர் லயன் ஆகியோருக்கு இடையில் பேச்சு நடத்தப்படவுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றாலும், இறுதி உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
எவ்வாறாயினும், பிரசல்ஸ்சிற்கு செல்வதற்கு முன்னர் இடம்பெறவுள்ள ஊடக சந்திப்பை பிரித்தானிய பிரதமர் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.