இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமை பேரவையில், இந்தியாவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்து மனி பண்டே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சமத்துவத்துடனும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது சரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post