ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இந்த மாத இறுதிக்குள் ஸ்தாபிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் யாப்பு இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, உத்தியோகப்பூர்வமாக இந்த மாதம் கூட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டமைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியையும் கைக்கோர்க்குமாறு சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்குமௌ இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைய இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உத்தேச யாப்பு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் கூட்டணி கைப்பற்றுவது தொடர்பான வியூகம், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான வியூகம், நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடினர். (TrueCeylon)
Discussion about this post