இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கடமையாற்றியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இன்று ஆராய்ப்பட்டு வருகின்றது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் இன்று (17) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய, இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமாரும் கலந்துக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post