மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை பரிசோதனை செய்வதற்காக ரெபிட் என்டிஜன் பரிசோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் (23) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை பரிசோதனை செய்வதற்காக இடங்களை 11 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்கள், 4 இடங்களில் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் இணை கொத்தணிகள் உருவாவதை தடுத்தல் ஆகியன இந்த பரிசோதனைகளை நடத்துவதற்கான நோக்கம் என அவர் கூறுகின்றார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை எழுமாறாக பரிசோதனை செய்ததில் இதுவரை 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)