பாணந்துரை − அட்டுளுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாணந்துரை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அட்டுளுகம பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரை அழைத்துவர செல்ல முயற்சித்த போது, குறித்த சந்தேகநபர் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது செய்திருந்தனர். (TrueCeylon)