நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடக கற்கை நெறி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் கவனம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.
தமிழ் மொழி மாணவர்களை இலக்கு வைத்து, ஊடகத்துறையில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து ஊடகத்துறை அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு அறிய கிடைக்கின்றது.
மூன்று மாதங்களில் ஊடக கற்கை நெறியை நிறைவு செய்து, பெறுமதியற்ற சான்றிதழ்களை வழங்குவதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்காக லட்சக்கணக்கான ரூபா, நிதி மோசடி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தற்போது ஊடகத்துறை அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகத்துறை அமைச்சிலோ அல்லது பத்திரிகை ஸ்தாபனத்திலோ எந்தவித பதிவுகளையும் மேற்கொள்ளாது, இவ்வாறான கற்கை நெறிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு, அதனூடாக நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் ஆராயப்பட்டு வருவதாக எமது ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. (TrueCeylon)
Discussion about this post