ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக இறையடி எய்தினார்.
சந்திரமதி குழந்தைவேல் இன்று (21) அதிகாலை தனது வீட்டில் வைத்து இறையடி எய்தியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்திரமதியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடத்தப்படவுள்ளன.
கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட சந்திரமதி, அண்மை காலமாக தனது குடும்பத்துடன் கொழும்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் கடந்த 4 வருடங்களுக்கு மேல் இவர் ஊடகவியலாளாராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,