கொவிட் வைரஸ் தொடர்பில் நாளாந்தம் மக்களை தெளிவூட்டி, தொற்று நோய்யை தடுப்பதற்கான பணியை முன்னின்று செய்யும் ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 6000 ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும், அவர்களில் 1150 பிரதேச ஊடகவியலாளர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post