கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் 20 நாட்களேயான சிசுவின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தமது சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணம் முதல், சிசுவின் சடலம் அனுப்பி வைக்கப்பட்ட தருணம் வரையான அனைத்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிசுவின் தந்தையான மொஹமட் பாரூக் மொஹமட் பாஹிம் மற்றும் தாயான ஃபாதிமா ஷிப்னாஸ் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், ரிஜ்வே ஆரியா வைத்தியசாலையின் பணிப்பாளர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மேலும் சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.
புதிதாக பிறந்த சிசுவிற்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆவணங்களும் தமக்கு வழங்கப்படவில்லை என மனுதாரர்கள், மனுவில் குறிப்பிட்டுள்ளனர். (TrueCeylon)