இலங்கையிலுள்ள விசேட தேவையுடையோர் தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் குறித்த தரவுகள் கிடையாது என கணக்காய்வாளர் தெரிவிக்கின்றார்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சினால் இதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என, இலங்கை விசேட தேவையுடையோரை வலுப்படுத்துவதற்கான தேசிய செயலகத்தில் நடத்தப்பட்ட கணக்காய்வுகளின் போதே தெரியவந்துள்ளது.
விசேட தேவையுடையோர் தொடர்பிலான தகவல்களை சேகரிப்பதற்காக 2019ம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அவ்வாறான திட்டமொன்று ஆண்டின் இறுதி வரை தயாரிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. (TrueCeylon)