கொவிட் தொற்றினால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலன்னாவ, பொரள்ளை, உடுபுஸ்ஸல்லாவ, கேகாலை, தெஹிவளை, பொலன்னறுவை, கொழும்பு – 08 மற்றும் உடுதும்பர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் 7 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ளார்.
பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.
உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவர் நுவரெலியா வைத்தியசாலையில் கடந்த 15ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கேகாலை பகுதியைச் சேர்ந்த 87 வயதான ஆண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்ற (16) உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று (16) உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்;.
கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உடுதும்பர பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர் முல்லேரியாவ ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
வேறு நோய் தொற்றுக்குள்ளான நிலையில், கொவிட் தொற்று ஏற்பட்டமையே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post