மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பாடசாலை நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.
இலங்கையில் புதிய வீரியம் கொண்ட வைரஸ் பரவலை அடுத்தே, கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாண, வலய கல்வி அலுவலகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
எதிர்வரும் தினங்களில் பாடசாலைகளில் ஏதேனும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அவ்வாறான நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி முதல் 25ம் திகதி வரை கற்றல் விடுமுறையை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post