ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பில் இந்த சந்தர்ப்பத்தில் எந்தவித கருத்தையும் வெளியிட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த அறிக்கையின் மொழிபெயர்ப்பு தற்போது அச்சிடப்பட்டு வருகின்றதுடன், எதிர்வரும் காலங்களில் இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post