இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 32,539 கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் 5,286 தடுப்பூசிகளும், இன்றைய தினத்தில் 32,539 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையில் இதுவரை 37,825 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post