இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பெண் விமானிகளுக்கு, விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று அணிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான சீனத்துறைமுக முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
புதிய பெண் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும், சிறிய ரக விமானங்களை செலுத்துவதற்காக விமானப்படை தலைமையகத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
PHOTO CREDIT :- SRI LANKA AIR FORCE