அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 195.78ஆக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.
கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200.47 ரூபாவை எட்டியிருந்தது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையிலேயே அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்து.
குறிப்பாக கொரோனா வைரஸ் இலங்கையை தாக்குதவற்கு முன்னர் 181.44 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னர் அதிகளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.
எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான PRASAC Microfinance நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது,
இவ்வாறு கிடைக்கப் பெற்ற இந்த தொகையினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.