விமான நிலைய மோப்ப நாய்களின் படையணியில் மேலும் 20 மோப்ப நாய்களை கடமைகளில் ஈடுபடுத்த சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள் வழங்கப்பட்ட 20 மோப்ப நாய்களை கொண்ட குழுவொன்றே கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களின் ஊடாக பொதிகளில் மிக சூட்சமமான முறையில் வெடிப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு செல்வதனை கண்டுபிடிக்கும் வகையிலேயே இந்த மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சிகள் அஸ்கிரிய பொலிஸ் பயிற்சி பாடசாலைகளில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(TrueCeylon)
Discussion about this post