பிரபல நிழலுலக தலைவரும், போதைப்பொருள் வர்த்தகருமான கிம்புலா எல்ல குணா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
குறித்த சந்தேகநபர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, சென்னையில் அழகபெரும மற்றும் சுனில் காமினி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு, தமிழகத்தின் நம்பகரமான தகவல்கள் உறுதிப்படுத்தின.
ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்திய முழுமையான தகவல்
இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா காமினி பொன்சேகாவின் கூட்டாளிகள் இரண்டு பேரை சென்னை கியூ பிரிவூ போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை நாட்டின் நிழல் உலக தாதாவாக செயல்பட்டு வந்தவர் அழாகா பெருமக சுனில் காமினி பொன்சேகா. இவர் மீது இலங்கையில் கொலை, கொள்ளை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் இலங்கை நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டடவர்.
இலங்கை நாட்டில் தேடப்படும் நிழல் உலக தாதாக்கள் 10 பேர் இந்தியாவில் பதுங்கியிருப்பதாக ‘இன்டர்போல்’ அமைப்பு இந்தியாவுக்கு தகவல் அளித்தது.
அதன்பேரில் அந்தந்த மாநில போலீசார் இலங்கை தாதாதக்களை தீவிரமாக தேடி வந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு இது குறித்த முழு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டிஜிபி திரிபாதி உத்தரவின் பெயரில் கியூ பிரிவு போலீசார் அது தொடர்பான தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி காஞ்சிபுரம் கியூபிரிவு போலீசார் அழாகாபெரும்மக சுனில் காமினி பொன்சேகாவை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் கென்னடி பெர்னாண்டோ, சின்னையா குணசேகரன் ஆகிய இரண்டு நபர்களை கியூ பிரிவு போலீசார் இருவரையும் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
கென்னடி பெர்னாண்டோ மீது இலங்கையில் மூன்று கொலை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளிட்டவை உள்ளன.
இலங்கை நாட்டில் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
இவரை கடந்த 2018ம் ஆண்டு சிபிசிஐடி நுண்ணறிவுப்பிரிவு போலீசார் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அதன்பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சென்னையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். பிறகு அவர் பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதே போன்று இலங்கையை சேர்ந்த சின்னையா குணசேகரன் மீது அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளது.
இவரை 2005ம் ஆண்டு சிபிசிஐடி நுண்ணறிவு பிரிவு போலீசார் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சென்னையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். குணசேகரன் மிக ஆடம்பரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆடி பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் சொந்தமாக வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
கென்னடி மற்றும் குணசேகரன் என இருவருமே இலங்கை தாதா பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அவர் பொன்சேகா அளித்த தகவலின் அடிப்படையில் கென்னடி பெர்ணாண்டோ, குணசேகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா அங்கோடா லோக்கா மதுரையில் பதுங்கி இருந்ததும் தனது அடையாளங்களை மாற்றி கோயமுத்தூரில் வந்து உடல்நலக் குறைபாட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் அதன் பின்னர் உயிரிழந்த அவரை எரித்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோயம்புத்தூர் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் மத்திய உளவுப்பிரிவான ‘ரா’ உள்ளிட்ட பிரிவுகளும் புலனாய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.(TrueCeylon)
Discussion about this post