இலங்கை தேசிய கொடியின் சிங்க இலட்சினையில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தமக்கு பல்வேறு தரப்பிலிருந்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 73வது சுதந்திர தின நிகழ்விற்கு பழைய தேசிய கொடியையே பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
தேசிய கொடியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அதில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
தேசிய கொடியிலுள்ள சிங்க இலட்சினையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கிடைத்ததன் பின்னர், தேசிய கொடியில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post