இலங்கை: கொவிட் தொற்றின் 2வது அலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது.
நேற்றைய தினம் இரண்டு உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களுடன், கொவிட் இரண்டாவது அலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் முதலாவது கொவிட் அலையினால் 13 பேர் மாத்திரமே உயிரிழந்த நிலையில், இரண்டாவது அலையினால் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் 2வது அலையினால் உயிரிழந்தோரின் வயதெல்லை தொடர்பிலான தகவல்களையும் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
வயதெல்லை | உயிரிழப்பு |
0 – 9 | 1 (0.50%) |
10-30 | 4 (2.00%) |
31-40 | 5 (2.50%) |
41-50 | 21 (10.50%) |
51-60 | 32 (16.00%) |
61-70 | 41 (20.50%) |
70வயதிற்கு மேல் | 96 (48.00%) |
Discussion about this post