இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பிரகாரம், நாட்டில் கொவிட் 2வது அலையினால் உயிரிழக்கும் வயதெல்லையும் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அதிகளவில் 71 வயதிற்கும் அதிகமானோரே, கொவிட் 2வது அலையினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
71 வயதிற்கு அதிகமான 64 பேர் கொவிட் தொற்றின் 2வது அலையினால் உயிரிழந்துள்ளனர்;.
61 முதல் 70 வயதான 27 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0-9 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரே கொவிட் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.
வயதெல்லை | உயிரிழப்பு (விதம்) |
0 – 9 | 1 (0.75%) |
10 – 30 | 3 (2.25%) |
31 – 40 | 4 (3%) |
41 – 50 | 13 (9.77%) |
51 -60 | 22 (16.54%) |
61 – 70 | 27 (20.3%) |
71 Above | 63 (47.36%) |
(TrueCeylon)