இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ எட்டியது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, இறுதியாக 8 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.