இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதியாக கொவிட் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
உயிரிழந்தோரின் பெண்ணொருவரும், இரண்டு ஆண்களும் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. (TrueCeylon)