இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 339ஆக அதி்கரித்துள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றின் முதலாவது அலையில் 13 உயிரிழப்புக்கள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில், இரண்டாவது அலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 326ஆக பதிவாகியுள்ளது.
குறிப்பாக கொவிட் தொற்றினால் அதிகளவில் 60 வயதுக்கு அதிகமானோரே உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 60 வயதுக்கு அதிகமான 231 பேர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
40 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட 89 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் 40 வயதுக்குட்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post