இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு உடற்பயிற்சி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த உடற்பயிற்சி பரிசோதனைகளில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த நால்வர் பின்னடைவை சந்தித்துள்ளதாக அறிய முடிகின்றது.
டில்ருவன் பெரேரா, குசல் ஜனித் பெரேரா, பானுக்க ராஜபக்ஸ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உடற்பயிற்சி பரிசோதனைகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த வீரர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த உடற்பயிற்சி பரிசோதனைகளில் 4 வீரர்கள் கலந்துக்கொள்ளவில்லை.
தனஞ்சய டி சில்வா மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஆகியோர் உபாதை காரணமாக இதில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, குசல் மென்டீஸ், திருமண பந்தத்தில் இணைந்தமையினால், அவராலும் இந்த உடற்பயிற்சி பரிசோதனைகளில் கலந்துக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.
மேலும், லஹிரு திரிமானவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளபின்னணியில், அவரும் இந்த உடற்பயிற்சி பரிசோதனைகளில் கலந்துக்கொள்ளவில்லை.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப் பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ள 36 வீரர்களில், 32 வீரர்கள் இந்த உடற்பயிற்சி பரிசோதனைகளில் கலந்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post