இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் மற்றும் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்குப்பற்றவுள்ள விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இந்த குழாமிலுள்ள 36 பேருக்க நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த பரிசோதனைகளின் போது குறித்த இருவருக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் இருவரும் சுகாதார பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் கலந்துக்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து கடந்த 28ம் திகதி முதல் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். (TrueCeylon)
Discussion about this post