இலங்கை இராணுவத்தின் ட்ரோன் கமரா ரெஜிமென்ட் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இந்த ரெஜிமென்ட் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிலத்தில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நாடு என்ற போதிலும், நாட்டில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களை ஆராய்வதற்காகவும், தாய் நாட்டை பாதுகாப்பதற்காகவும் ட்ரோன் ரெஜிமென்ட்டின் உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இராணுவத்தை அனைத்து விதத்திலும் வலுப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.