இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று மாலை 4.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இரண்டு இராஜதந்திர அதிகாரி வருகைத்தந்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ற இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. (TrueCeylon)
Discussion about this post