வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள புரவி சூறாவளி, தற்போது இலங்கையை அண்மித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக சுமார் 140 கிலோமீற்றர் தொலைவில் தற்போது புரவி சூறாவளி நிலைக்கொண்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு 7 மணி முதல் 10 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் குறித்த சூறாவளி, கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணிக்கும் 80 முதல் 90 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்பதுடன், இடைக்கிடை காற்றின் வேகம் 100 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் எனவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் வரையான கடல் பிராந்தியங்களில் அலையின் சீற்றம் சற்று அதிகமாக காணப்படும் என கூறப்படுகின்றது.
அலையின் சீற்றம் ஒரு மீற்றருக்கு உயரக்கூடும் என்பதுடன், கரையோரங்களை அண்மித்துள்ள தாழ்நிலப்பகுதிகளில் நீரில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஆகிய மாவட்டங்களில் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவதுடன், ஏனைய பகுதிகளில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை பெரிதும் மாறியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
புரவி சூறாவளி நிலைக்கொண்டுள்ள இடத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்