வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்க நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் கூறுகின்றது.
கடல்சார் தொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.