கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டியது.
இறுதியாக 6 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில், நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோர் விபரம்
01.திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
02.பல்லேதலவின்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
03.ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண்ணொருவர், IDHவை த்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
04.நுகேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
05.வத்தளை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் ஹங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
06.ஹுன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post