நாடு பூராகவும் நேற்றிரவு மூன்று மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட திடீர் சுற்றி வளைப்புக்களில் 3520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பு நேற்றிரவு 11 மணி முதல் மூன்று மணித்தியாலங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1185 பேரும் அடங்குவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 20,000 பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (TrueCeylon)
Discussion about this post