இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது.
48 வயதான பெண்ணொருவரும், 80 வயதான ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண், கொழும்பு−12 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், ஆண் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது