இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கினிகத்ஹேன, சியம்பலாண்டுவ, கொழும்பு-15 மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.
74, 54, 73 மற்றும் 42 வயதான நால்வரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் 14,962 பேர் குணமடைந்துள்ளனர்.
5743 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.