சிலாபம் – வண்ணாத்திவில்லு பகுதியில் அண்மையில் மர்மமான முறையில் இறந்த பறவைகளின் மாதிரிகள் அரச இரசாயண பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுளளன.
இந்த பறவைகளின் உடலில் ஏதேனும் நச்சு பதார்த்தம் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே, பறவைகளின் மாதிரிகள் அரச இரசாயண பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த பறவைகளுக்கு எந்தவொரு நோயும் ஏற்படவில்லை என்பது ஆரம்பகட்ட ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
வண்ணாத்திவில்லு பகுதியில் அண்மையில் ஆயிரக்கணக்கான பறவைகள் மர்மமான முறையில் இறந்திருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post