கேகாலை ஆயுர்வேத மருத்துவரான தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பு மூலிகை மருந்துக்கு, ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திரம் குழுவினால் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு ஆயுர்வேத ஓளடத உற்பத்திக்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கைகளையே ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திரம் குழு முன்னெடுக்கின்றது.
தம்மிக்க பண்டாரவின் வீட்டில், அவரினால் தயாரிக்கப்பட்ட ஓளடதம், தரத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு, குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஓளடதம், அடுத்த கட்ட அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், சுய விருப்பத்தின் பேரில் ஓளடதத்தை பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூத்திரம் குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள குறித்த மருந்திற்கு, ஆயுர்வேத நெறிமுறை குழு அனுமதி வழங்க வேண்டியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், நெறிமுறை குழுவின் ஆய்வு தொடர்பிலான தகவல்களை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் நெறிமுறை குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், அதனை விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். (TrueCeylon)