நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இறுதியான நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பிட்டகோட்டே, ராகமை, கடவத்தை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியாவினால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார.
ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ராகமை பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூளையில் ஏற்பட்ட நோய், மற்றும் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது,
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே இந்த உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையிலிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருத நோய் மற்றும் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கூறப்படுகின்றது.
வட மாகாணத்தில் பதிவான முதலாவது கொவிட் உயிரிழப்பு இது என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது. (TrueCeylon)