இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயத்தை மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொவிட் வைரஸ் சவாலை எதிர்நோக்கியுள்ளதை அடுத்து, அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
On special request from Sri Lankan President @GotabayaR, President @ibusolih is consulting stakeholder authorities of the Government of Maldives to assist Sri Lanka in facilitating Islamic funeral rites in the Maldives for Sri Lankan Muslims succumbing to COVID19 pandemic. pic.twitter.com/EPj6TCCLLp
— Abdulla Shahid (@abdulla_shahid) December 14, 2020
President Solih’s decision is based on the close longstading bilateral ties between #SriLanka & Maldives, & to ensure help to face the challenges of the pandemic.This assistance will also offer solace to our Sri Lankan Muslim brothers & sisters grieving over burial of loved ones.
— Abdulla Shahid (@abdulla_shahid) December 14, 2020