இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம், இறுதியாக மூன்று கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
60 மற்றும் 86 வயதான பெண்கள் இருவரும், 60 வயதான ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.