இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நிமோனியா நோய் இருந்துள்ள நிலையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.