முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 1,493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இன்று வரையான காலம் வரையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 48 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழான வர்த்தானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, இரண்டு வாரங்களின் பின்னரே இந்த கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)