இலங்கையில் எதிர்வரும் இரு தினங்களில் விண்கற்கள் விழும் சாத்தியம் காணப்படுவதாக ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த விண்கற்களை மக்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் என அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இலங்கை வான் பரப்பில் இன்றும் மற்றும் நாளைய தினங்களில் விண்கற்கள் மழையை காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு சுமார் 150 வரையான விண்கற்கள் வீழ்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த நிறவனம் தெரிவிக்கின்றது.
இன்றிரவு 12 மணிக்கு பின்னரான காலத்தில் விண்கற்களை காண முடியும் எனவும் கூறப்படுகின்றது.
இன்று மாத்திரமின்றி, நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் இந்த விண்கல் மழை வீழ்ச்சியை காண முடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)