இலங்கையிலேயே அதிக வயதான கொரோனா உயிரிழப்பு நேற்றைய தினம் காலியில் பதிவாகியுள்ளது.
காலி – பீடர் கிரிங்கொட பகுதியைச் சேர்ந்த 103 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் கடந்த 6ம் திகதி தனது வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரேதத்தின் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக, இந்த பெண்ணுக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடெல்ல பகுதியிலுள்ள மயானத்தில், குறித்த பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post