நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் மோட்டார் சைக்கிள் கொள்ளை தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
திட்டமிட்ட குழுவொன்றினால் மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்படுகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தமது மோட்டார் சைக்கிள்களை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post