18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்களை வழங்கும் திட்டமொன்று குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இதற்கான யோசனையை தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக உலகின் சில நாடுகள் சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post