இலங்கைக்கு வருகைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கையடக்கத் தொலைபேசி ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
விஸா அனுமதியை பெற்றுக்கொள்ளும் போது, இந்த ஆப்பின் ஊடாக காப்புறுதியொன்றை பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமானது என அதிகார சபை கூறுகின்றது.
இந்த ஆப் ஜனவரி மாதம் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
”Sri Lanka Tourism” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகின்ற இந்த ஆப்பில், காப்புறுதி திட்டத்திற்கு மேலதிகமாக பி.சி.ஆர் கட்டணம் மற்றும் இலங்கையில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் என்பன தொடர்பிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளிட்ட வணிக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post