இறக்குவானை – உக்வத்தை பகுதியிலுள்ள 10 வீடுகளைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொடகவெல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த பண்டார தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி – மல்வல பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறக்குவானையில் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.
இந்த திருமண நிகழ்வின் பின்னர், மணமகனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதையடுத்து, உக்வத்தை பகுதியிலுள்ள 10 வீடுகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட பாடசாலைகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொடகவெல சுகாதார வைத்திய அதிகாரி இந்திகா குணதாஸ குறிப்பிடுகின்றார்.
சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக, நால்வருக்கு நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால், இறக்குவானை – உக்வத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருமண பந்தத்தில் இணைந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கூறுகின்றார். (TrueCeylon)